லோகாഃ ஸமஸ்தா ஸுகினோ பவந்து !

இராமாயணம் 
வெற்றி புரந்தர கலைமகளென
விளங்கும் புகழ்மிகு தவசீலர்
போற்றி உலகெல்லாம் புகழ்நிறைந்த
பரமாச்சார்ய மஹாஸ்வாமி சீடர்
முற்றிலும் முழுஞானஒளி திகழும்
உற்ற பாலபெரியவான் குருநாதர்
மற்றிடும் தாளினை அடியவர்க்கு
பரவழி காட்டும் அருள்நாதர் 


எட்டு பத்தாண்டு அகவை
ஏற்றமுடன் கடந்திடும் ஞானி
எட்டு  திசையிலும் உள்ளவர்
என்றென்றும் வணங்கும் ஞானி
நாட்டு மக்களின் நலனுக்கென
நாலும் உழைத்திடும் ஞானி
காட்டும் பவக்கடல் கடந்திடும்
கண்கண்ட தோணி

ஆற்றிய பணிக்கு அளவில்லை
அடுக்கிச் சொல்லிடத் தேவையில்லை
மாற்று மாதத்தோறும் மதித்திடும்
மாண்பு கொண்டவர் பொய்யில்லை
தூற்றுவோர்க்கும் அருள் காட்டும்
தூய உள்ளத்தார் மிகையில்லை
கற்றவர் வியந்திடும் கலையறிவு
கொண்டவர் என்றிடில் தவறில்லை .

முன்னவனே முதல்வனே நாரணனே
உன்னையே வேண்டி நிற்கின்றேன்
என்னவனே எனக்கென எதனையும்
என்றும் நான் வேண்டேன்
சொன்னவனே கீதையே உலகினுக்காய்
சொன்னபடி நடப்பவர் என்பதினால்
சின்னவன் வேண்டுகின்றேன் உன்தாளையே
சீராக பல்லாண்டு இவர் வாழ்ந்திடவே 


ஸ்வஸ்தி ப்ர்ஜாப்யഃ பரிபாலயந்தாம்
ந்யாய்யேத மார்கேண மஹூம் மஹூசாഃ
கோ ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து  நித்யம்
லோகாഃ ஸமஸ்தா ஸுகினோ பவந்து !

இது ராமாயண பாராயணத்தில் இறுதியில் வருகிற ஸ்லோகமாகும் . இதன் பொருள் " நியாயமான வழியில் ஆட்சி செய்து , எல்லா மக்களும் நலமாக இருக்கும்படி மன்னன் பரிபாலனம் செய்ய வேண்டும் : பசுவும் வேதமறிந்த பிராஹ்மணனும் பாதுகாக்கப்படட்டும் : எல்லா மக்களும் சுகமாக இருக்கட்டும்".

Popular posts from this blog

अर्चिरादि मार्ग

THE PANCHA MAHA YAJNAS : Five Daily Sacrifices To Be Performed By Every Householder

Nothing to beat Indians in knowledge....!