ஞாநோதயமே ஞாதுருவே !
நாமாதியிலா நற்க்கதியே !
யானோ நீயோ ஆதிபரம் ,
யாதாய் விடுமோ பேசாயே;
தேனார் த்தில்லை ச்சீரடியார்
தேடும் நாடாமருமானூர்
யோனே , மான் நேர் விழி பாகம்
கொண்டாய் நயினார் நாயகமே !
ஆள்வாய் நீயென்னாவியொடு
யாக்கை பொருள் மும்மலமுதிரும்
தேல்வாயிடையின்றிரியாம
றேவே காவாய் பெரியோயே !
நாள் வாடந்தம் நறுனரென
நெருக்கின்றது பாரருமானூர்
நாள் வானின்றாடாராயோ
நாதா , நயினார் நாயகமே !
உருவாயுருவாயருவுருவா
யொன்றாய் பலவாயுயிர்க்குயிராய்
தெருளாயருளாய் தேருருணி
ன்றிடமாய் நடுமாத்திரை வடிவாய்
இருளாய் வெளியாயிகபரமா
யின்றாயன்றாயருமாநூர்
மருவாய் வருவாயெனையால்வாய்
நாதா , நயினார் நாயகமே !
வானாய் மலையாய் வாடியினும்
வாணாள் வீணாயழியுமுனென்
ஊனாயுயிராயுடயோனாய்
ஒன்றாய் முன்றாய் வாராயோ
கானாயனலாய் கனை கடலாய்
காராய் வெளியாயருமானூர்
தாநாய் நிலக்கும் தர்ப்பரமுன்
தாள் தா நயினார் நாயகமே !
பூவாய் மணமாய் புணரசமாய்
பொடியாய் முடியாய் நெடியோனாய்
தீவாயுருவாய் திரிசியமாய்
தேனாரமுதாய் திகழ்கின்றாய்
நீ வா காவாயெநையாள்வாய்
நித்தா ! சித்தாயருமானூர்
தேவா ! மூவா முதல்வோனே !
தேனே ! நயினார் நாயகமே !
அரியும் விதியும் தேடியினும்
அறியா நெரியாயெரிவுருவாய்
மரியா மரிமாநிடவடிவாய்
மரியாதேயினி வா காவாய்
பிரியாதெனையாள்வாய் தேவா
ப்பிறிய ப்பெரியோயருமாநூர்
புரி வாழ்ந்தருளீடும் கோவே !
பூவே ! நயினார் நாயகமே !
அன்றோயின்றோ யமதூதர்
க்கன்றே நின்றாடாராயோ
குன்றே !குடையே !கோதணமே !
கோவே !காவாய் குலதேவே !
அன்றேயின்றேயாரடியே
நாயேன் நீயேயருமாநூர்
நின்றாய் நின்றாடாராயோ
நாதா ! நயினார் நாயகமே !
நின்றாரடிசேரடியார் தம்
நிந்தாதியெலாம் நீக்கி நிதம்
சந்தாநமதாய் நின்றாளும்
சந்தாபமிலா தன்மயமே !
வன் தாபமிலாதென் முன் நீ
வந்தாள்வாயே யருமனூர்
நின்றாய் நின்றாடாறாயோ
நாதா ! நயினார் நாயகமே !
பொன்னே ! மணியே ! மரதகமே !
பூவே ! மதுவே ! பூம்பொடியே !
மன்னே ! மயிலே ! குயிலே ! வன்
மலையே ! சிலையே ! மானிலமே !
என்னேயெனையாள்வாய் நீயே
யெளியேன் நான்யேனருமாநூர்
தன்னந்தனியே நின்றாய் நின்
தாள்தா நயினார் நாயகமே !
கல்லோ மரமோ காரயமோ
கடிநம் நந்னெஞ்சரியேன் யான்
அல்லோ பகலோ உண்டி வி-
ட்டல்லோ கலமாய் நின்றடியேன்
சொல்லாவல்லா சுருதி முடி
சொல்லாய் நல்லாயருமாநூர்
நல்லார் மணிமாதவ ! காவாய்
நாதா ! நயினார் நாயகமே !
ஸ்ரீ நாராயண குருதேவன்